இன்று காலை சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Accident

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

பளைநோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்னால், துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சிறுவன் பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் குடை பிடித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை காற்றுக்கு குடை மடிந்தவுடன் வீதி மறைத்துள்ளது.

இதனால் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version