ஜனநாயகம் எனும் தோற்றத்தில் நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து ஜனநாயக மாநாடு நடத்தியதை தொடா்ந்து சீனா அமெரிக்காவை கடுமையாக சினந்துள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயகம் என்ற பெயரில் நாடுகளிடையே வெறுப்புணர்வை உண்டாக்குவதும் பிற நாடுகளோடு யுத்தம் செய்வதும் அமெரிக்காவின் கைவந்த கலையாகும்.
இதன் மூலமாக அமெரிக்கா உலகை அழிவுப் பாதைக்குத்தான் அழைத்து செல்கிறது.
அத்தோடு பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக, ஜனநாயகத்தை அமெரிக்கா ஒரு பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
மேலும் ஜனநாயக மாநாட்டை நடத்தியுள்ளதன் மூலம், அந்த அரசியல் முறையை அமெரிக்கா ஒரு கருவியாக்கியுள்ளது எனவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையில் சா்வதேச ஜனநாயக மாநாடு காணொலி மூலம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அம் மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி உள்பட உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றினார்கள்.
குறிப்பாக அம் மாநாட்டுக்கு, சீனாவுக்கும் ரஷியாக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதற்கு மாறாக, சீனாவின் ஓா் அங்கமான தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன் மூலம், தைவானை ஒரு தனி நாடாக அமெரிக்கா மறைமுகமாக அங்கீகரித்துள்ளதேயென கூறலாம்.
தைவானை அமெரிக்கா அழைத்தது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், நாடுகளுக்கிடையே பகைமை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் எனத் சீனா தெரிவித்துள்ளது.
#world
Leave a comment