mani
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொறுப்பை தந்துவிட்டு பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாது! – முதல்வர் மணிவண்ணன்

Share

நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரியகுளம் தொடர்பில் வரலாற்றாசிரியர்கள் எவரும் உரிமை கோரவில்லை என்ற கவலை எனக்குள்ளது. அந்த கவலை இன்று நீங்கியுள்ளது. ஆரியகுளம் தொடர்பாக குரல் கொடுக்குமாறு நான் பல வரலாற்றாசிரியர்களிடம் கூறியிருந்தேன். நான் ஒரு செவ்வியிலே ஆரியகுள வரலாறு பற்றி தெரிவித்திருந்தேன். நான் சொன்ன பின்னரே ஆரியகுளம் தொடர்பாக சர்ச்சைகள் உருவாகி இருந்தன.

இந்த சவால்களில் இருந்து என்னைப் பாதுகாக்க வேண்டியதும் என்னுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டியதும் சமூகப் பெரியார்களதும் சமூகத்தினதும் கடமையாகும்.

ஆரியகுளம் என்பது சிங்களவர் உடையது அல்ல. இது ஆரியச் சக்கரவர்த்திகளினுடைய குளமென நான் கூறியிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் உரிமை கோரி கடிதம் அனுப்புகின்றனர.

நாங்கள் எங்கள் மரபுரிமைகள் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பயணங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்போது சில இடங்களில் இடையூறுகளை நாங்கள் சந்திக்கலாம். அதற்காக எங்களுடைய மக்கள் மத்தியில் இருந்து எமக்கு பெரும் ஆதரவு எமக்கு தேவைப்படுகின்றது.

தனி ஒரு அரசியல்வாதியாக ஒரு பொறுப்பை தந்துவிட்டு பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாது. இதை நான் அன்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கின்றேன். எங்கள் செயற்பாடுகளுக்கு நீங்கள் பக்கத்துணையாக பயணிக்க வேண்டும்.

நாவலர் மண்டபம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றேன். யாழ். மாநகரசபை இந்த மண்டபத்தை சரியாக பராமரிக்க தவறியுள்ளது என்பதில் உண்மை இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

நாவலர் மண்டபத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக தனியான முகாமைத்துவ குழு ஒன்றை நாங்கள் சமூகப் பெரியார்களையும் உள்ளடக்கி செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நாவலர் தமிழருடைய மரபுரிமைச் சொத்து.

எதிர்வரும் நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோன்று நாவலர் மண்டபத்தை புனரமைப்பதற்கான செலவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு கொடை வள்ளல் இதை புனரமைத்து தருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார். இதனை புனரமைப்பு செய்ய சபையின் அனுமதி கிடைத்திருக்கிறது.

அத்தோடு இந்த விடயங்களோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இதனை சரியாகப் பேணி பாதுகாப்பதற்கு முகாமைத்துவக் குழு ஒன்றை என்னுடைய காலத்திலேயே நியமிப்பதற்கு விரும்புகிறேன்.

எதிர்வரும் மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்தில் நான் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் என்னால் செய்ய முடியாது. அதிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் வருகின்ற பெப்ரவரி மாதம் வரை நான் இருந்து நாவலர் மண்டபத்தில் சிறப்பாக பராமரிப்பேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....