Kajen
செய்திகள்இலங்கை

“வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் பரவலுக்கு இராணுவமே காரணம்”: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

Share

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்காக இராணுவத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (அக் 23) நடைபெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றிய முக்கிய அம்சங்கள்,
“யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதைப்பொருள் பூச்சிய பாவனையில் இருந்தது. அவர்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இயங்கியதால் இது சாத்தியமானது.”

போருக்குப் பிந்தைய பரவல்: போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியது. “இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.”

இராணுவத்தின் தற்போதைய பங்கு: “இன்று சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது. விடுதலைப் புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது.”

காவல்துறையின் அலட்சியம்: போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளையும் காவல் நிலையங்கள் ஏற்க மறுக்கின்றன. எனவே, போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்துத் தேடிப்பார்க்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு அவசியம்: காவல்துறை, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயங்களை அந்தந்த மக்களிடமே விடவேண்டும். அப்போதுதான் தங்களது மக்களுக்குத் தாம் பொறுப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும். வடகிழக்குடன் தொடர்பல்லாத தரப்பினரால் அங்குள்ள பிரச்சினைகளை ஒருபோதும் தீரக்க முடியாது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு நிபந்தனை: “அரசாங்கம் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு எங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும். எனினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின் இந்தச் செயற்பாட்டிலிருந்து இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும்.” நிபுணத்துவம் பெற்றவர்களை மட்டும் இதில் ஈடுபடுத்தினால் மாத்திரமே ஒழிப்பு சாத்தியப்படும். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...