தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம்
செய்திகள்இலங்கை

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

Share

புலிகளை கண்டு அஞ்சியவர் அப்பாவி கைதிகளை மிரட்டுவது வீரமில்லை! – பொன்சேகா

முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த, தற்போது அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டுவது வீரம் கிடையாது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களையும், துப்பாக்கிகளை காட்டி மிரட்டுபவர்களையும் அமைச்சுப் பதவியில் வைத்திருந்தால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று எல்லோராலும் விமர்சிக்கப்படுகின்றன, போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளை பார்த்து ஓடி ஒளிந்திருப்பார். அவ்வாறு மரண பயத்திலிருந்த நபர்,

ஆனால் தற்போது நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை முழந்தாளிட செய்து அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமான செயல் அல்ல ,

இவ்வாறான காரியத்தை எந்த தைரியசாலிகளும் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...