mahi scaled
செய்திகள்இலங்கை

சற்று முன்னர் பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!

Share

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 2ம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது, அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 பேரைக் கொண்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி உள்ளிட்ட பகுதிளுக்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். இதன்படி, பிரதமருடனான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாா்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...