உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை தான் நிரூபிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றுகையில், தனது உயிர் போகும் முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவேன்.
சில காரணங்களை அம்பல்படுத்த வேண்டியுள்ளது. இம்முறை போகும் போது பாரிய ஆபத்தான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சேறு பூசப்பட்டது.
தன்னை எப்படியாவது உள்ளே தள்ளிவிட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நான் இன்று கூறுகிறேன். இந்த தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை தான் நிரூபிப்பேன். தனது மூச்சு நிற்கும் முன்னர் அதனை செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment