Jaffna 02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை

Share

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த வர்த்தகச் சந்தை இன்றும், நாளையும் இரு தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வில் இடம்பெற்றது.

Jaffna 01 1

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பற்றிக் கைத்தறி ஆடைகள், கருப்பட்டி, ஒடியல் உள்ளிட்ட பனை உற்பத்திப் பொருட்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட தென்னை உற்பத்திப் பொருட்கள், நல்லெண்ணை, ஊதுபத்தி, பாரம்பரிய உணவு உற்பத்திகள்,

Jaffna 1

மட்பாண்ட உற்பத்திகள், கைப்பணிப்பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....