20220303 172217 scaled
செய்திகள்விளையாட்டு

சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிதுரையப்பா விளையாட்டரங்கில்

Share

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற சுதந்திர கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியானது நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த இறுதிப் போட்டியில் வடமாகாண அணியும் தென்மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் இம்மானுவல் ஆனல்ட் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் இந்த போட்டிக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றார்

ஊடக சந்திப்பின் ஆரம்பத்தில் மாலைதீவில் உயிரிழந்த இலங்கை உதைபந்தாட்ட வீரர் பியூஸ்லஸ்ஸிற்கும் அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

#Sports

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...