யாழிலிருந்து 610 KM தொலைவில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்
யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் அளவில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கு பகுதியில் 296 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிதமான தீவிரத்தன்மையுடன் கருதப்படுகிறது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment