இனியும் நாடு முடங்காது! - சுகாதார அமைச்சர் நம்பிக்கை
செய்திகள்உலகம்

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

Share

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது.

இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன் கடக்க வேண்டும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எம்மிடம் தடுப்பூசி இருந்த காரணத்தால் நான்காவது அலையின் பாதிப்பை முடிந்தளவில் தடுக்க முடிந்துள்ளது.நாட்டில், 80 வீதமானோர் ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.

56 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளில் நான்காவது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. பிரான்ஸின் உள்ளேயும் இந்த நிலைமை விரைவில் தோன்றலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...