நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார் .
தற்போது கோவிட் தோற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடைய ஆலோசனை அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
Leave a comment