WhatsApp Image 2021 09 20 at 18.40.31 scaled
செய்திகள்இலங்கை

நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்!! – ஹரின் கிண்டல்

Share

பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தடுப்பூசி போட்டனர். ஆனால் இங்கு மட்டும்  அரசாங்கம் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேதடுப்பூசி வழங்கியது. தடுப்பூசி வழங்குவதில் நீடித்த தாமதத்தால் நாடு சீரழிந்துள்ளது.

நாட்டில் இன்று சீனி இல்லை, மா இல்லை, மருந்துகள் இல்லை. குறைந்தபட்சம் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள கழிப்பறைகளும் இல்லை. வாகன உதிரிப்பாகங்கள் இல்லை.

நாட்டுக்குள் கொரோனா வைரஸுடன் பரவியுள்ள மிகப்பெரிய வைரஸுக்கு எதிராக நாங்கள் அணிதிரண்டுள்ளோம். நாட்டில் உள்ள வைரஸ்களை சீரமைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

மத்திய வங்கியிலிருந்து நுழைந்துள்ள வைரஸ், யானைக் கடத்தலில் இருந்து நுழைந்துள்ள வைரஸ் மற்றும் உரங்களிலிருந்து நுழைந்துள்ள வைரஸ் ஆகியவற்றை நாங்கள் கிட்டிய எதிர்காலத்தில் முன்வைக்கிறோம்.

மேற்கூறிய அனைத்து வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வந்தவை. எங்கள் நாட்டின் ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற சகல வைரஸுகளும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளன.

இந்த வைரஸ்களிலிருந்து நாம் எமது நாட்டை விடுவிக்க வேண்டும். நாட்டு மக்களை முடக்கத்தில் தவிக்கவிட்டு தலைமைகள் வெளிநாடுகளுக்கு பயணிக்கின்றன.

நாட்டின் தலைவர் வெளிநாடு செல்லவில்லை. தனது சொந்த ஊருக்கே அவர் சென்றுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...