சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் யுகத்தை நோக்கி நாட்டை கொண்டு சென்றுள்ளனர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுவதன் முன்னரே, சகலவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம், தோல்வியான புடலங்காய் திட்டம்.
இதன்மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 02 வருடங்கள் ஆட்சிக்கு வந்து நிறைவடைவதன் மூலமே மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கிராமங்களுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டும் நிலை ஏற்படும்.
மக்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன். எனக்கு பதவிகளை வழங்கி, எனது வாயை மூடி விட முடியாது” என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.