“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அத்தனை அம்சங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
அதிகாரமற்ற மாகாணசபை ஊடாக எமது நிலத்தை பாதுகாக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது. எனவே, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்பு, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே சாலச்சிறந்தது.” – என்றும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
Leave a comment