தாய்லாந்து நாட்டில் கஞ்சா செடி வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துப் பொதுமக்கள் இக்கஞ்சா செடியினை வரையறுக்கப்பட்ட அளவு தமது சொந்தத் தேவைகளுக்காக வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
அங்கு பாஸ்ற் பூட்களில் மிக முக்கியமான உணவாக பீட்சா காணப்படுகிறது.
இந்நிலையில் பீட்சாவுடன் கஞ்சா சேர்த்துத் தயாரித்து அதனை விற்பனை செய்வது தொடர்பில் தாய்லாந்தில் விளம்பரப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உத்தியோகபூர்வமாக பீட்சாவில் வரையறுக்கப்பட்ட அளவு கஞ்சாவை இணைப்பது குறித்து, பீட்சா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
பீட்சா விற்பனை மந்தகதியில் காணப்படும் நிலையில், தாம் ஒரு விற்பனை உக்தியாக, அளவான கஞ்சாவை பீட்சாவுடன் கலப்பதற்குத் தீர்மானித்தாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்தளவு கஞ்சாவை நுகர்வதால், அதனை நுகர்பவர்களுக்கு தூக்கம் வரலாம் எனவும் பீட்சா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை அந்நாட்டில் கஞ்சா சட்டவிரோதமானதாக இருந்தாலும், பொதுமக்கள் சில நிபந்தனைகளுடன் குறைந்தளவு எண்ணிக்கையிலான கஞ்சா பயிரிட அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment