diwali 679 1571638039 1605507165 1606472776
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மக்களிடையே ஏற்பட்ட பதற்றநிலை!

Share

கார்த்திகை தீபத்திருநாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடிய வேளையில், அங்கு  வந்த இராணுவத்தினரால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பல பாகங்களிலும் நேற்றைய தினம் இந்துக்களால் கார்த்திகை தீப விளக்கீடுகள் கொண்டாடப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் கடைகளிலும், வீடுகளிலும் விளக்குகளை  ஏற்றி கொண்டாடினர்.

இதனை அறிந்து அங்கு வந்த இராணுவத்தினராலும்  , இராணுவ புலனாய்வாளர்களாலும் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

IMG 9579

இராணுவத்தினர் தீபம் ஏற்றப்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன்,  அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துக்கொண்டதாக முல்லைதீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் கலாசார பண்பாட்டுடன் கூடிய பண்டிகைகளை கூட கொண்டாட முடியாத சூழலில் தமிழர் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அச்சத்துடனேயே நாட்டில் வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த 17 (புதன்கிழமை) அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நினைவேந்தலுக்கு  தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...