வளர்ப்பு நாய்களுக்கு அடுத்த ஆண்டு முதல் வரி
வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்ற யோசனை தம்புள்ள மாநகர சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ள மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு முதல் வரி செலுத்துதல் கட்டாயமாக்கப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை தம்புள்ள மாநகர சபை தவிசாளர் ஜாலிய ஓபத்தாவால் தம்புள்ள மாநகர சபை மாதாந்த கூட்டத்தில் முன்வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment