tata
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கியது டாட்டா !!

Share

ஏர் இந்தியா நிறுவனத்தை,டாட்டா குழுமம் அதிகாரபூர்வமாக வாங்கிக்கொண்டுள்ளது.

இந்திய ரூபாயில் 18 ஆயிரம் கோடிக்கு டாட்டா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வந்த நிலையில்,

அந்நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் அதனை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அண்மித்த ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், கடன் நெருக்கடியால் அந்நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய யாரும் முன்வராத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசாங்கத்தினால், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் தொடர்பான ஏல விவரங்களை சமர்ப்பிக்கஅறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தைக் கொள்வனவு செய்ய டாட்டா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏலவிபரங்களை சமர்ப்பித்தது.

டாட்டா நிறுவனத்தின் விபரங்களை ஏற்றுக்கொண்ட இந்திய மத்திய அரசு, பதினெட்டு ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை, டாட்டா நிறுவனம் வாங்கியுள்ளதாக, இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...