Sivagnanam Sritharan
செய்திகள்இலங்கை

தமிழ் இளைஞர்கள் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள்! – கனேடியத் தூதுவருக்கு சிறீதரன் எம். பி எடுத்துரைப்பு!!!

Share

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் இன்றைய தினம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை அவர்களது காரியாலயத்தில் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது.

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவரின் உறுதிமொழியோடு கலந்துரையாடல் சுமுகமாக முடிந்தது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...

01 4
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை? இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு சந்தேகம்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தமக்குத் தெரியாமல் இரகசியப்...

02 4
செய்திகள்இலங்கை

ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் மறைவு: கொழும்பு தூதரகத்தில் ரணில் விக்ரமசிங்க அஞ்சலி!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) திடீர் மறைவுக்கு ஆழ்ந்த...

03 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் – வவுனியா மின்சார விநியோகத்தில் கோளாறு: நாட்டின் பல இடங்களில் மின்தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்...