பல்கலை அருகில் வாள்வெட்டு! – இளைஞன் மருத்துவமனையில்

147a6d45 9627 4bde 9ae3 94d9028e8041

இளைஞன் ஒருவன் கும்பல் ஒன்றால் துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில்
இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற்றுள்ளது.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் யாழ். நகர் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், குறித்த நபரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் பரமேஸ்வரா சந்தியில் வழி மறித்து மிகக் கடுமையான வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பித்து, இளைஞன் பல்கலைகழக பக்கமாக தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version