dayasiri jayasekara
செய்திகள்அரசியல்இலங்கை

அரசுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கோம்! – தயாசிறி

Share

” அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒருபோதும் வழங்காது.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் காரணம். ஜனாதிபதித் தேர்தலின்போது எமது 15 லட்சம் வாக்குகள்தான் தீர்க்கமானதாக மாறியது. அன்று மொட்டு கட்சியுடன் வர சொன்ன மக்கள், இன்று மீண்டும் அந்த கட்சியுடன் வேண்டாம் என சொல்கின்றனர். நாம் மக்கள் பக்கம் நின்றே முடிவெடுக்க வேண்டும். இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது.

வெளியேறும் காலப்பகுதியை எமது கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் நாம் வெளியேறுவோம். அதுவரை அரசியல் இருப்போம். அரசை தவறான வழியில் செல்ல இடமளிக்கமாட்டோம். அவ்வாறு சென்றால அதற்கு எமது ஆதரவு இருக்காது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
31 8
இலங்கைசெய்திகள்

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல்...

32 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்

இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும்...

30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...