அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் ஏற்கின்றோம். அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
அதற்கு அப்பால் சென்று, சுயநிர்ணய உரிமை கோரப்பட்டால் அதற்கு வழங்க முடியாது. கையொப்பம் இடவும் மாட்டேன். ஏனெனில் அவ்வாறு செய்தால் அது நாமும் தனி நாடு கோருகின்றோம் என்ற எதிர்ப்பை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும். அது எமது மக்களுக்கும் பாதிப்பாக அமையும். எமது மக்களுக்கு உரிமை, அபிவிருத்தி என இரண்டுமே அவசியம்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment