Attack
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆசிரியரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவர்கள்!

Share

ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மாணவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போத்தல – காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும், சிறுவனொருவனும் நேற்று (21) இரவு ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் காயங்களுடன் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த ஆசிரியர், மேற்படி சிறுமியின் தாயாருடன் தகாத உறவினைப் பேணிவந்தமையால், ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த சிறுமி ஆசிரியரைத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...