நாளை கொழும்பு வருவோம் – முடிந்தால் தடுத்து பாருங்கள்! – அரசுக்கு ஹரின் சவால்

Harin Fernando

“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.”

இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

” எமது போராட்டம் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அரசுக்கு திடீரென சுகாதார நடைமுறைகள் நினைவுக்கு வந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கவே இந்த முயற்சி. நாம் தயங்கமாட்டோம். அரசுக்கு எதிரான போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று நாளையுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனவே, ஜனாதிபதியின் பயணம் தவறு என்பதையும் சுட்டிக்காட்டுவோம். பொலிஸில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். எனவே, ஜனநாயக போராட்டத்துக்கு வழிவிடுவார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அஞ்சமாட்டோம்.”- என்றார்.

#SriLankaNews

Exit mobile version