முன்னாள் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை!
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு, கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகம், நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பரந்த ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எதிர்வரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்துவோம்,
மனித உரிமைகள் மீறல் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பெறுமதி வாய்ந்தது.
காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் செயற்பாடுகளும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 16 பேரை விடுவித்துள்ளோம். மேலும் பலரை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன.
இந்த அனைத்து விடயங்களும் ஜனநாயக கொள்கைக்கேற்ப செயற்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நாங்கள் பரந்த ஜனநாயக ரீதியில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமல்ல, சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் இந்த ஜனநாயக சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் – என தெரிவித்துள்ளார்.
Leave a comment