பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டு எரித்திருந்தது.
பின்னர் இதனைக் காணொளியாகப் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியல்கோட் நகரில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் உடலை தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
#SrilankaNews