இலங்கையில் எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
சீனா தூதுவர் ஊடாக ஆறு மாத காலத்திற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எண்ணெய் கொள்வனவிற்கான ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது.
Leave a comment