இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படவுள்ளது.
இதனை போக்குவரத்து இராஜாங்க செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், இம் மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை உட்பட பாகிஸ்தான், ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் குறித்த சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment