வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், நாளை கடன் தவணையை திருப்பி செலுத்தினால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடன் தவணையை செலுத்துவதற்காக உள்ள 500 மில்லியன் டொலரை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கவே பயன்படுத்த வேண்டும். இதுவே தற்போது உள்ள ஒரு தீர்வு என வெரிடேஜ் ரிஸர்ச் நிறுவனத்தின் இயக்குனர் நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
மின்சாரத்திற்கு தேவையான எரிபொருள் பெற்றுக் கொள்வது போன்ற பாரிய பிரச்சினைகள் நாட்டிற்குள் உள்ளன. அவை அனைத்தையும் தீர்ப்பதற்கு டொலர்களே தேவை,
இந்த நிலையில் டொலர் நாட்டிற்கு வெளியே சென்றுவிட்டால் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்.
எனின் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி மீளச் செலுத்த வேண்டிய கடன் தவணையை மறுசீரமைப்பது மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருப்பிச் செலுத்தப்படவுள்ள 500 மில்லியன் டொலர்கள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை மீட்பதற்காகப் பயன்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Leave a comment