அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் நாடு வரலாறு காணாத அளவில் பாரிய பொருளாதார சவாலை எதிர்க்கொண்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகும். இலங்கை வரலாற்றில் மோசமான பொருளாதார சவாலை தற்போது எதிர்கொண்டுள்ளது.
சாதாரண மக்களிடையே இது தொடர்பில் தெளிவிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை அவர்கள் உணர்கிறார்கள்.
நாட்டில் எங்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews