i9
செய்திகள்அரசியல்இலங்கை

முட்டிமோதிக் கொள்ளும் இலங்கை – சீனா

Share

ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்து வந்த சீனா தற்போது அவர்களின் கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. –

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சீன அரசால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக சர்வதேசத்தால் ராஜபக்ச அரசை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியை பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்சக்களுக்கு கிடைக்கப் பெற்றது.

அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இரு நாட்டு நட்புறவில் பாரியதொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் வகையில் சேதனப்பசளை விவகாரம் காணப்படுகிறது. இதனை மையப்படுத்தியே மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை இலங்கை இறையாண்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் சீனாவின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் செயல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன உரத்தின் தரம் குறித்த சர்ச்சை சீனாவின் சினத்துக்கு காரணமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் பல திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளது. சீன நிதியில் இலங்கையில் முக்கிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை சீனாவின் கடனுக்குள் சிக்கியுள்ளது. இதனால் இலங்கை மீது சீனா தனது அழுத்தத்தை பிரயோகின்றது.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவுக்கு வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...