1777281 renuka
விளையாட்டு

பெண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி! 65 ரன்னில் வென்றது இந்தியா

Share

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

#Cricket #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68ff1b2d7e658
விளையாட்டுசெய்திகள்

இந்திய துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் மருத்துவமனையில் அனுமதி: விலா எலும்புக் காயத்தால் உள் இரத்தப்போக்கு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரருமான ஷ்ரேயாஸ் ஐயர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...

MediaFile 2
செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடர்: டக்வத் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில், டக்வத் லூயிஸ் முறைப்படி (D/L Method)...

15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு...