john cena montreal quebec derniere fois
செய்திகள்விளையாட்டு

17 முறை சாம்பியன் ஜான் சீனா: தோல்வியுடன் WWE மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Share

WWE மல்யுத்தப் போட்டிகளின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜான் சீனா (John Cena), 23 ஆண்டுகாலச் சேவைக்குப் பிறகு தனது கடைசிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், WWE போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

தனது கடைசிப் போட்டியில் ஜான் சீனா, கன்தர் (Gunther) உடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜான் சீனா ‘டேப் அவுட்’ (Tap Out) முறையில் தோல்வியைத் தழுவினார்.

தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை WWE நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர்.

2002ஆம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா, தனது தனித்துவமான மல்யுத்த உத்திகள் மற்றும் ‘என்ட்ரி’ இசையால் உலகெங்கிலும் ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் WWE மல்யுத்தப் போட்டிகளில் மொத்தம் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ராக் (The Rock), டிரிபிள் எச் (Triple H), ரேண்டி ஆர்ட்டன் (Randy Orton), அண்டர்டேக்கர் (The Undertaker) உள்ளிட்ட WWE ஜாம்பவான்களுடன் இவர் மோதியுள்ளார்.

‘தி சூசைட் ஸ்குவாட்’, ‘ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார். அடுத்த கட்டமாக அவர் தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...