இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை
இலங்கைசெய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி புதிய சாதனை

Share

மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

இன்றையதினம் (04.07.2023) வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.

33 வயதான சமரி அத்தபத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் 758 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் பேத் மூனி 752 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்காவின் லோரா வோல்வார்ட் 732 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளனர்.

சனத் ஜயசூரியவுக்கு அடுத்ததாக , ஆண்கள் அல்லது மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளின் துடுப்பாட்டத்துக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரே இலங்கையர் சமரி அத்தபத்து ஆவார்.

இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

இவர் நியூஸிலாந்து மகளிர் அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும், அதேதொடரில் 3 ஆவது போட்டியில் 80 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மொத்தமாக 3 போட்டிகளிலும் இவர் 248 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...