ஆசியக் கிண்ண தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆசியக் கிண்ண தொடரில் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தடுமாறிய இலங்கை, அதன் பின்னர் வெற்றி நடைபோட்டது.
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 11 ஆம் திகதி இறுதிப்போட்டிக்கு முன்னர், இவ்விரு அணிகளுக்கும் சுப்பர் – 4 சுற்றில் நாளை மோதுகின்றன.
இறுதிப்போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இப்போட்டி இரு அணிகளுக்கும் அமையவுள்ளது.
#Sports
Leave a comment