serina
செய்திகள்விளையாட்டு

27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா

Share

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்த ஓய்வுடன் அவரது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வருகிறது.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர். இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.

ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.

இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளார்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...