MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

Share

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடத்தப்படவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அபுதாபியில் இந்த மினி ஏலத்தை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக பி.சி.சி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினி ஏலத்திற்கு முன்னதாக இந்தத் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும்.

இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் (Trading) முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால், ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...