images 5 3
செய்திகள்இலங்கை

100 பில்லியன் மேலதிக வருமானம் ஈட்டிய வாகன இறக்குமதி வரிகள்: 2026 நிதித் திட்டங்களை இலகுவாகத் தயாரிக்க முடிந்தது – பாராளுமன்றத் திணைக்களம்!

Share

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும் அதிகமான மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத மேலதிக வருமானம் காரணமாக, 2026ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிதிசார் திட்டங்களைத் தயாரிப்பது இலகுவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வாகன இறக்குமதி வேகம் குறைவடைவதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் வருமான அதிகரிப்பு வேகமும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள், 2026ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் (Appropriation Bill) பற்றிய வரைவு அறிக்கையை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்வதற்கு எடுத்த தீர்மானத்தை அறிவித்து பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (நவ 11) நாடாளுமன்றத்தில் கூடியபோதே இந்த வரைபு அறிக்கை பரிசீலிக்கப்பட்டது.

பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் (PFM), பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் (PDM), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்குள் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...