1774186 kishan1
செய்திகள்விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

Share

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர். தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது. பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும். இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

#Sports

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...