இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தனது 68 ஆவது வயதில் இன்று காலமானார்
இலங்கை அணி பங்கேற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கியிருந்த அதேவேளை, இலங்கை அணியின் சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் பந்துல வர்ணபுர விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பந்துல வர்ணபுரவின் தலைமையிலேயே இலங்கை அணி முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றிபெற்றது.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மைய நாட்களாக வைத்தியசாலையில் பந்துல வர்ணபுர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Leave a comment