1775240 shubman gill
செய்திகள்விளையாட்டு

3 போட்டிக்கும் ஒவ்வொரு கேப்டன்! – தென்னாப்பிரிக்காவை கிண்டலடித்த முன்னாள் வீரர்

Share

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.

இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனாக 3 வெவ்வேறு வீரர்கள் செயல்பட்டுள்ளனர். அணியின் வழக்கமான கேப்டன் பவுமா, முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2-வது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை.

2-வது போட்டியில் கேசவ் மகாராஜ் தென்னாபிரிக்காவின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. டேவிட் மில்லர் தென்னாபிரிக்க அணியை வழிநடத்தினார். இவ்வாறு 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களுடன் விளையாடிய தென்னாபிரிக்கா அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொரு போட்டியின் டாஸின் போதும் வெவ்வேறு தென் ஆப்பிரிக்கா கேப்டன்களுடன் ஷிகர் தவான் இவ்வாறு தான் நிற்பார்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...