இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் மூன்று வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வான்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றியுள்ளது .
முன்னதாக, இலங்கை அணி வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment