Djokovic
விளையாட்டுசெய்திகள்

ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தது அவுஸ்திரேலியா!-

Share

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில், கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்தனர்.

இந்தநிலையில், அவுஸ்திரேலிய ஒபனில் பங்குபெற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

ஆனால், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனது தனிப்பட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...