bl 720x375 1
விளையாட்டுசெய்திகள்

34 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை

Share

34 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜோசுவா டி சில்வா 20 ஓட்டங்களுடனும் ஜோமேல் வொரிக்கான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 34 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஜமைக்காவில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 217 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலாம் 56 ஓட்டங்களையும் பஷீம் அஷ்ரப் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரோச் 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் ஓர் விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களைப் பெற்றது.

கெய்ரன் பவல் மற்றும் போனர் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர். கிரைஜ் பிரத்வெயிட் 97 ஓட்டங்களுடனும் ரொஸ்டன் சேஸ் 21 ஓட்டங்களுடனும் ஜெரமைன் பிளக்வுட் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

கெய்ல் மேயர்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஜேஸன் ஹோல்டர் 58 ஓட்டங்களுடனும் கெமார் ரோச் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், பஷீம் அஷ்ரப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இன்று போட்டியின் மூன்றாவது நாளில், மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...