இலங்கை
இரண்டாவது பிணை மனு தாக்கல் செய்தார் தனுஷ்க


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது இரண்டாவது பிணை மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த 06 ஆம் திகதி அவர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக பொலிஸார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் தனது இரண்டாவது பிணை மனுவினை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், பிணை மனு மீதான விசாரணை டிசம்பர் 8 ஆம் திகதி அந்நாட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.