விளையாட்டு
அடுத்த இரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கு நடக்கவுள்ளது தெரியுமா?


அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பையும் இங்கிலாந்துக்கே ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025-ம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சிலும் நடைபெறுகிறது.
இதற்கான திகதி விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.