விளையாட்டு
‘உஷ்..கொண்டாட்டம்’ என்னை விமர்சித்தவர்களுக்கான பதில் – முகமது சிராஜ்
‘உஷ்..கொண்டாட்டம்’ என்னை விமர்சித்தவர்களுக்கான பதில் – முகமது சிராஜ்
“விக்கெட் வீழ்த்திவிட்டு நான் உதட்டில் விரல் வைத்து “ உஷ்” என்ற ரீதியில் நான் கொண்டாடுவது என்னை விமர்சித்தவர்களுக்காகவும், வெறுப்பாளர்களுக்காகவும்தான். அவர்கள் வாயை அடைக்கத்தான் இந்த கொண்டாட்டம்.”
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
என்னை கடுமையாக விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். சிராஜால் இதைச் செய்ய முடியாது, சிராஜால் அதை செய்வது கடினம் என்று விமர்சித்தார்கள் என்னுடைய வெறுப்பாளர்கள். அவர்களுக்கு நான் எனது பந்துவீச்சின் மூலம்தான் பதில் அளிக்கமுடியும், அதில் மட்டும்தான் அவர்களுடன் பேச முடியும் என்று எண்ணினேன்.
அதனால்தான் விக்கெட் வீழ்த்தியபின், உதட்டில் விரல் வைத்து ‘உஷ்’ என்று கூறி கொண்டாடுகிறேன். கே.எல்.ராகுல் மீது பாட்டில் கார்க்கை தூக்கி ரசிகர் எறிந்த சம்பவம் எனக்குத் தெரியாது. நான் அதை கவனிக்கவும் இல்லை. ஆனால், பார்வையாளர்கள் ராகுலை ஏதும் கடுமையாகப் பேசவில்லை.
இதுபோன்ற ஆடுகளங்களில் 4ஆவது வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கியது சரியான முடிவு, முக்கியமானதும்கூட. தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபின், நாங்கள் அனைவரும் பேசிவைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பந்துவீசியது எங்களுக்கு உதவியாக இருந்தது. என்னுடைய திட்டம் என்பது எனது பந்துவீச்சில் நிலைத்தன்மை இருக்க வேண்டும்.
ரஞ்சிக் கோப்பையில் முதலில் நான் விளையாடிய போது, ஆடுகளத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பந்துவீசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இதுதான் என்னுடைய திட்டம், வேறு ஏதும் முயற்சிக்கமாட்டேன். தொடர்ந்து பல்வேறு விதமாக நான் முயற்சித்தால், அது அணியைப் பாதிக்கும், என்னுடைய பந்துவீச்சையும் பாதி்க்கும் என்று சிராஜ் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல் - tamilnaadi.com