235793890 199452058901003 8783729900034485819 n
விளையாட்டுசெய்திகள்

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 217 – மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம்!!

Share

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 217 – மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றம்!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

பாகிஸ்தான் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு ரி-20 ஆட்டங்கள், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ரி-20 தொடரில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டதால் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகின்றது. நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 70.3 பந்துப் பரிமாற்றங்களில் 217 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. முன்னணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் பஹாத் ஆலம் அரை சதமடித்து 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பஹீம் அஷ்ரப் 44 ஓட்டங்களும், பாபர் அசாம் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 இலக்குகள் இழப்புக்கு 2 ஓட்டங்களை எடுத்திருந்தது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...