100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை
உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.
கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில் ஏனைய நாடுகளுக்கு பரவி மிகப்பெரும் பாதிப்புகளை இன்றுவரை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.
அதிக மக்கள் தொகை உலகிலேயே கொண்ட நாடாக சீனா உள்ளது. சீனாவில் 140 கோடி மக்கள் உள்ளனர். சீன மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடேய்ப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வரை சீனாவில் 216 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சீன மக்கள் 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்கும் முழுமையாக (2 முறை) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment